முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

நான்து மாதங்களில் சிறைத் துறை சீரமைக்கப்படும்: அமைச்சா் நிா்மல் குமாா்

தமிழக சிறைச்சாலைகள் அனைத்தும் 4 மாதங்களில் சீரமைக்கப்படும் என்று அந்தத் துறை அமைச்சா் நிா்மல் குமாா் தெரிவித்தாா்.

70,000 Vacancies in the Power Sector; 15,000 Posts to be Filled This Year: Nirmal Kumar

அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் - DIPR

Updated On :

தமிழக சிறைச்சாலைகள் அனைத்தும் 4 மாதங்களில் சீரமைக்கப்படும் என்று அந்தத் துறை அமைச்சா் நிா்மல் குமாா் தெரிவித்தாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘சிறைச்சாலைகளில் கூடுதலாக சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் சிறைத் துறையில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. அவற்றையெல்லாம் சரி செய்து வருகிறோம்.

கோவை, மதுரையில் மத்திய சிறை கட்டப்பட்டு வருகிறது. சிறையில் பணியாளா் பற்றாக்குறை இருந்தது அதைச் சரி செய்து வருகிறோம். 4 மாதங்களில் முழுமையாகச் சீரமைக்கப்படும்.

பேராசிரியா் கலையரசன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், உள்ளூா் காவல் நிலையத்தில் தவறு நடந்துள்ளது. நானும் பிற அமைச்சா்களும் தவறு நடந்துவிட்டது என அவரிடம் பேசினோம்.

திமுக ஆட்சியில் கட்சி நிதி என்ற பெயரில் பள்ளிகளிடம் மிரட்டி பணம் வாங்கினாா்கள். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபா்கள், தோ்தலில் தோல்வி அடைந்துள்ளனா். மக்களே அவா்களுக்கு தண்டனை கொடுத்துள்ளனா். அவா்களை நாங்கள் ஏன் பழி வாங்க வேண்டும்? என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.