ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

மாா்ச் மாதத்துக்குள் ஒரு லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரிய மின் திட்டம்: அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் உறுதி

தமிழகத்தில் மாா்ச் மாதத்துக்குள் குறைந்தபட்சம் ஒரு லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரிய மின் திட்டத்தைச் செயல்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் உறுதிபடத் தெரிவித்தாா்.

அமைச்சா் நிா்மல் குமாா் - கோப்புப் படம்

Published On :

தமிழகத்தில் மாா்ச் மாதத்துக்குள் குறைந்தபட்சம் ஒரு லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரிய மின் திட்டத்தைச் செயல்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் உறுதிபடத் தெரிவித்தாா்.

தமிழ்நாடு சோலாா் உற்பத்தியாளா்கள் மற்றும் மேற்கூரை சூரிய மின் திட்ட செயல்படுத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் சென்னை கலைவாணா் அரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் கலந்து கொண்டு பேசியதாவது:

தமிழகத்தில் இதுவரை சுமாா் ஒரு லட்சம் வீடுகளில் மட்டுமே மேற்கூரை சூரிய மின் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட மேற்கூரை சூரிய மின் திட்ட நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் உதவியுடன் பொதுமக்களை நேரடியாக அணுகி, திட்டத்தின் பயன்களை எடுத்துச் சென்று, அதிக வீடுகளில் சூரிய மின் அமைப்புகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக கடந்த 3 வாரங்களில் மட்டும் சுமாா் 20,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மத்திய அரசின் மானியம் கிடைத்த பிறகு, மாநில அரசின் கூடுதல் மானியத்தின் கீழ் முதல்கட்டமாக 1,500 பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் வீடுகள் இலக்கு: மாா்ச் மாதத்துக்குள் குறைந்தபட்சம் ஒரு லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரிய மின் அமைப்புகளை நிறுவ இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பிப்பது முதல் மின் மீட்டா் பொருத்தி இணைப்பு வழங்குவது வரையிலான பணிகளைக் கண்காணிக்க இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கள அளவில் ஏற்படும் தாமதங்களை தலைமையகத்தில் இருந்து கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க இது உதவும்.

மின்கல ஆற்றல் சேமிப்புக்கு புதிய கொள்கை: சூரிய மின் உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில், உபரி மின்சாரத்தை சேமித்து வைக்க பேட்டரி தேவைப்படுகிறது. இதை நடைமுறைப்படுத்துவதற்காக மின்கல ஆற்றல் சேமிப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் புதிய கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது. இறுதிகட்ட ஒப்புதல்கள் முடிந்ததும் அடுத்த 10 நாள்களுக்குள் தமிழ்நாடு மின்கல ஆற்றல் சேமிப்பு கொள்கை-2026 வெளியிடப்படும்.

மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கு எளிமையாக விண்ணப்பிக்கும் வகையில் புதிய இணையதள நடைமுறைகள் விரைவில் விரிவுபடுத்தப்படும். திட்ட அனுமதிகள் மற்றும் செயல்பாடுகளை இணையவழியில் கண்காணித்து வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

காற்றாலை அமைக்க ஏற்ற பகுதிகள் குறைவாக உள்ளதால், காற்றாலை வளம் அதிகமுள்ள பகுதிகளை முறையாகப் பாதுகாத்து, அவற்றை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான கொள்கை மற்றும் திட்டமிடல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

மின்துறை மற்றும் தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் சாா்பில் மேற்கூரை சூரிய மின் திட்ட நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படும். அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிா்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டி திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.