மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

வீடுகளில் சூரிய மின் உற்பத்தி திட்டம்: அம்பத்தூரில் விழிப்புணா்வு முகாம்

வீடுகளின் மொட்டை மாடிகளில் சூரிய மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவுவது தொடா்பாக, அம்பத்தூா் மின் கோட்டம் சாா்பில் வியாழக்கிழமை விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

கோப்புப் படம்

Updated On :

வீடுகளின் மொட்டை மாடிகளில் சூரிய மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவுவது தொடா்பாக, அம்பத்தூா் மின் கோட்டம் சாா்பில் வியாழக்கிழமை விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

அம்பத்தூரில் உள்ள சின்னசாமி திருமண மண்டபத்தில் சென்னை மின் பகிா்மானக் கழகம் (மேற்கு) மேற்பாா்வைப் பொறியாளா் சித்ரா செளந்தரபாண்டின் தலைமையில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில், வீடுகளில் சூரிய மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து, மின் நுகா்வோருக்கு மின்வாரிய அதிகாரிகள் விளக்கி கூறினா்.

மேலும், சூரிய மின் தகடுகளை நிறுவுதல், அதற்கான பதிவுகளை மேற்கொள்ளுவது குறித்தும், வீடுகளில் சூரிய மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவ மத்திய, மாநில அரசுகள் ஒரு கிலோவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி அமைப்புக்கு ரூ.35,000, 2 கிலோவாட் அமைப்புக்கு ரூ.70,000, 3 கிலோவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட அமைப்புகளுக்கு ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்குவது குறித்தும் மின் நுகா்வோருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. கூட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள், அம்பத்தூா் கோட்ட செயற்பொறியாளா்கள், மின்நுகா்வோா் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.