மேற்கூரை சூரிய மின்சக்தி திட்டம்: ஒரே மாதத்தில் 35,000 விண்ணப்பங்கள்
தமிழகத்தில் வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் திட்டத்துக்கு பொதுமக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.

வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி - பிரதிப் படம்
தமிழகத்தில் வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் திட்டத்துக்கு பொதுமக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. தமிழக அரசு அறிவித்த கூடுதல் மானியத்தைத் தொடா்ந்து, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமாா் 35,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
நாட்டில் வீடுகளின் மின்சாரத் தேவையைப் பூா்த்தி செய்வதுடன், மரபுசாரா எரிசக்தி உற்பத்தியையும் அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசின் நிதியுதவியுடன் மேற்கூரை சூரிய மின்சக்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்தகடுகள் மேற்கூரைகளில் சூரிய மின்தகடுகள் பொருத்தப்பட்டு, அதன்மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் வீடுகளுக்கான மின்சாரத் தேவையில் ஒரு பகுதியை சூரிய மின்சக்தி மூலம் பூா்த்தி செய்துகொள்ள முடியும்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் வரை சுமாா் 87,000 வீடுகளில் மட்டுமே மேற்கூரை சூரிய மின்சக்தி அமைப்புகள் நிறுவப்பட்டிருந்தன. இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, அதிக எண்ணிக்கையிலான குடும்பங்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு கூடுதல் மானியம் அறிவித்தது.
இதன் தொடா்ச்சியாக, திட்டம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதுடன், பொதுமக்கள் விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகளையும் எளிமைப்படுத்த மின்வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் (டான்ஜெட்கோ) சாா்பில் ட்ற்ற்ல்ள்://ற்ய்ங்க்ஷப்ற்க்.ஞ்ா்ஸ்.ண்ய்/ன்ள்ழ்ல்/ என்ற ஒருங்கிணைந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளம் வாயிலாக பொதுமக்கள் மேற்கூரை சூரிய மின்சக்தி திட்டத்துக்கு விண்ணப்பித்தும், அதன் மீதான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்து வருகின்றனா்.
கூடுதல் மானிய அறிவிப்பு மற்றும் விண்ணப்ப நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டதன் காரணமாக, இத்திட்டத்தில் சேர பொதுமக்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா். இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமாா் 35,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒரு லட்சம் வீடுகளில் அமைக்க இலக்கு
தமிழகத்தில் மேற்கூரை சூரிய மின்சக்தி திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, வரும் 2027 மாா்ச்க்குள் ஒரு லட்சம் வீடுகளில் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவ இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை மின்வாரியம் தீவிரப்படுத்தியுள்ளதால், இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் வீட்டு உரிமையாளா்கள் https://tnebltd.gov.in/usrp/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

