
சூரிய மின்சக்தி மேற்கூரை அமைக்க 10 நாள்களில் 16,500 பேர் விண்ணப்பம்!
வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி அமைக்க 16,500 விண்ணப்பித்தது குறித்து...

வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி - பிரதிப் படம்
தமிழகத்தில் வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி அமைக்க மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீடுகளில் சூரிய மின்சக்தியை ஊக்குவிக்க இல்லந்தோறும் சூரிய மின்சக்தி திட்டத்தை 2024-ல் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். இத்திட்டத்தில் வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி அமைக்க மத்திய அரசு சார்பில் மானியம் வழங்கப்படும்.
இதனைத் தொடர்ந்து, சூரிய மின்சக்தியைத் தொடர்ந்து ஊக்குவிக்க மாநில அரசு சார்பிலும் மானியம் வழங்கப்படும் என செப். 21 ஆம் தேதியில் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, ஒரு கிலோவாட் மின் உற்பத்தித் திறனுக்கு மத்திய அரசு சார்பில் 30,000 ரூபாய், மாநில அரசு சார்பில் 5,000 ரூபாய் என அதிகபட்சம் 35,000 ரூபாய் வரையில் மானியம் வழங்கப்படும்.
இதேபோல், 2 கிலோவாட் மின் உற்பத்தித் திறனுக்கு மத்திய அரசு 60,000 ரூபாயும், மாநில அரசு 10,000 ரூபாய் என அதிகபட்சம் 70,000 ரூபாய் மானியம் வழங்கப்படும். 3 கிலோவாட் மின் உற்பத்தித் திறனுக்கு மேலே இருந்தால் மத்திய அரசு சார்பில் அதிகபட்சமாக 78,000 ரூபாயும், மாநில அரசு சார்பில் அதிகபட்சமாக 22,000 ரூபாய் என அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரையில் வழங்கப்படும்.
சூரிய மின்சக்திக்கு மத்திய, மாநில அரசுகள் மானியத் தொகை வழங்குவதையடுத்து, மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், சூரிய மின்சக்திக்கு மானியம் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்த 10 நாள்களிலேயே, வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி அமைக்க 16,500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
Summary
16,500 people applied for rooftop solar power installations in 10 days
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





