பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

மீனவ குடும்பங்களுக்கு உதவித் தொகை உயர்வு: மீனவர் நலத் துறை அறிவிப்புகள்!

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் குறித்து...

minister srinath

அமைச்சர் ஸ்ரீநாத் - படம்: சட்டப்பேரவை

Published On :2 செப்டம்பர் 2026, 4:10 pm IST

சட்டப்பேரவையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்துக்குப் பதிலளித்த அமைச்சர் ஸ்ரீநாத், புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:

  • கடலில் மீன்பிடிக்கும் போது காணாமல் போகும் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தினசரி உதவித்தொகை, ரூபாய் 350-லிருந்து ரூபாய் 600- ஆக உயர்த்தப்படும்.

  • கடல் மீன்வளத்தை பெருக்கும் நோக்கில், கடலோர மாவட்ட கடற்பகுதிகளில் செயற்கை மீன் உறைவிடங்கள் அமைக்கப்படும்.

  • உவர்நீர் மீன் வளர்ப்பு மற்றும் கடல்வாழ் உயிரின வளர்ப்புக் கொள்கை உருவாக்கப்படும்.

  • கடலில், மிதவை கூண்டு மீன் வளர்ப்பு மேற்கொள்ள மானிய உதவி வழங்கப்படும்.

  • கடற்பாசி வளர்ப்பு மேற்கொள்ள மானிய உதவி வழங்கப்படும்.

  • திருவொற்றியூர் மீன்பிடித் துறைமுகத்தில் அதிநவீன மீன் சந்தை அமைக்கப்படும்.

  • நன்னீர் இறால் வளர்ப்பில் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்க, நன்னீர் இறால் இனப்பெருக்க மையம் அமைக்கப்படும்.

  • சென்னையில், சர்வதேச கடல் உணவுக் கண்காட்சி மற்றும் சமையல் திருவிழா நடத்தப்படும்.

  • முட்டுக்காடு -மீன்வளர்ப்பு தொழில் காப்பகம் மற்றும் தொழிற்பயிற்சி பயிலும் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கு புதிய தங்கும் விடுதி அமைக்கப்படும்.

  • கடலில் மீன்பிடிக்கும்போது, அண்டை நாட்டினரால் மீனவர்களின் சிறைபிடிக்கப்படும் குடும்பங்களுக்கு, தற்போது வழங்கப்படும் தினசரி உதவித்தொகை, ரூபாய் 500-லிருந்து ரூபாய் 600- ஆக உயர்த்தி வழங்கப்படும்.

  • இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டு, மீட்க இயலாத படகுகளின் உரிமையாளர்களுக்கு ரூ. 1.86 கோடி நிவாரண உதவித்தொகை வழங்கப்படும்.

Summary

Responding to the debate on the demand for grants for Fisheries and Fishermen Welfare in the Legislative Assembly, Minister Srinath also made new announcements.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.