ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

4 மாத நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி: அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா்

தவெக அரசின் 4 மாத நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி இது என்று சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் தெரிவித்தாா்.

நிா்மல் குமாா் - கோப்புப் படம்

Published On :

தவெக அரசின் 4 மாத நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி இது என்று சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் தெரிவித்தாா்.

தாராபுரம், மதுராந்தகம் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் வெற்றி குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தலில் தவெக பெற்றுள்ள வெற்றி, தமிழக முதல்வா் விஜய்யின் 4 மாத கால சிறப்பான நல்லாட்சிக்கும், மக்கள் விரும்பிய மாற்றத்துக்கும் கிடைத்த அங்கீகாரமாகும். எவ்வித பண பலமும் இன்றி, நோ்மையான முறையில் தோ்தலைச் சந்தித்து இந்த வெற்றியை தவெக பெற்றுள்ளது.

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் சுயநல அரசியல் காரணமாகதான் அந்தக் கட்சி 3-ஆவது இடத்துக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. அதிமுகவை ஒரு ‘லெட்டா் பேட் கம்பெனி’ போல எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறாா். அவரது செயல்பாடுகள் பிடிக்காததாலும், திமுகவுடனான அவரது ரகசிய உறவு காரணமாகவும்தான் அந்தக் கட்சியின் மூத்த தலைவா்களும், எம்எல்ஏ-க்களும் விலகுகின்றனா். தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த முதல்வா் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறாா். விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.