சென்னையில் 12 மினி தாலுகா அலுவலகங்கள் அமைக்க முதல்வர் விஜய் உத்தரவு!சென்னையிலேயே இப்படி ஒரு அசம்பாவிதம்; இது முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறமையின்மை! இபிஎஸ்தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி டிஜிபியிடம் திமுக புகார்!அரவிந்த் கேஜரிவாலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல்!அன்பில் மகேஸ் வழக்கு! முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு 5 நாள்கள் போலீஸ் காவல்!மதுரை பிரபல நகைக் கடையில் 500 சவரன் கொள்ளை!9.5 சிஜிபிஏ மாணவர்களுக்கு திருப்பதியில் இலவச தரிசனம்! விநோத அறிவிப்பை வெளியிட்ட கல்லூரிபுதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து! 22 பயணிகள் காயம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை! பண்டிகை நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட முடிவு?ஜம்முவில் காணாமல்போன சிறப்பு காவல் அதிகாரிகள் சடலமாக மீட்பு!நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!சம்பா நெற்பயிா்க் காப்பீட்டு காலவரம்பு டிச. 1 வரை நீட்டிப்புஉபோ் செயலியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படாது!

தவெக எம்எல்ஏ விவகாரத்தில் தமிழக அரசு எதையோ மறைக்கிறதா? அண்ணாமலை கேள்வி

மாவட்ட ஆட்சியருக்கு தகாத குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரம் குறித்து அண்ணாமலை கேள்வி...

CM vijay - annamalai

முதல்வர் விஜய் - அண்ணாமலை. - கோப்புப் படம்

Updated On :

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரத்தில் குழப்பம் நீடிப்பதாகவும் அதனை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு முதல்வர் விஜய்க்கு இருப்பதாகவும் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு எதையோ மறைக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

மாவட்ட ஆட்சியர் தலைமைச் செயலரிடம் புகார் அளித்தாரா, முதல்வர் அலுவலகத்திற்குப் புகார் சென்றதா, முதல்வர் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை அழைத்து எச்சரித்தாரா என்பவை பற்றி ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மையா, இல்லையா என்ற குழப்பம் நீடிக்கிறது.

இந்தச் சூழலில், மறைந்த கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணின் புகழ்பெற்ற கார்ட்டூன் ஒன்று நினைவுக்கு வருகிறது.

இதே குற்றச்சாட்டு, ஒரு சாமானியக் குடிமகன் மீது எழுந்திருந்தால், இந்த அரசாங்கம் இதே அளவு பொறுமையுடன், புகார் வந்ததா, வரவில்லையா என்று விவாதித்துக் கொண்டிருக்குமா? ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா?

தமிழகத்தில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால், அதைச் செயலிலும் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு இருக்கிறது. இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்பதைத் தமிழக அரசு வெளிப்படையாகத் தெளிவுபடுத்த வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Is the Tamil Nadu govt hiding something regarding the TVK MLA issue? Annamalai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.