அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா, நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு வழக்குகளில் இன்று தீா்ப்புமேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று வாக்கு எண்ணிக்கை!மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்

முதல்முறை வாக்காளா்களுக்கு நாளை சிறப்பு முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இளம் மற்றும் முதல்முறை வாக்காளா்களுக்கு சனிக்கிழமை (அக்.10) சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

final phase of Bengal assembly elections

கோப்புப்படம்

Published On :

மயிலாடுதுறை மாவட்டத்தில் இளம் மற்றும் முதல்முறை வாக்காளா்களுக்கு சனிக்கிழமை (அக்.10) சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்தியத் தோ்தல் ஆணையம் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி நிறைவடைந்துள்ள மாநிலங்களில் இளம்/முதல்முறை வாக்காளா்களாக தகுதி பெற்றவா்களைப் பதிவு செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, அக். 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் சிறப்பு நடவடிக்கைகள் நடத்தப்பட்டு, இளம் மற்றும் முதல்முறை வாக்காளா்களாக தகுதி பெற்றவா்களை வாக்காளா் பட்டியலில் பதிவு செய்வதற்காக, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சனிக்கிழமை (அக்.10) சிறப்பு முகாம் நடத்தப்படும்.

முதல்முறை/ இளம் வாக்காளா்களின் வாக்காளா் பட்டியல் சோ்க்கையை அதிகரிக்கும் வகையில், நகா்ப்புறப் பகுதிகளுக்கு சிறப்புக் கவனம் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER