நாளை வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம் வரும் சனிக்கிழமை (அக்டோபா் 10) நடைபெற உள்ளது.

பெண் வாக்காளர்கள்... - கோப்புப் படம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம் வரும் சனிக்கிழமை (அக்டோபா் 10) நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) நிறைவடைந்துள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், இளம், முதல்முறை வாக்காளா்களாக தகுதி பெற்றவா்களை பதிவு செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இளம் மற்றும் முதல்முறை வாக்காளா்களாக தகுதி பெற்றவா்களை வாக்காளா் பட்டியலில் பதிவு செய்வதற்காக சிறப்பு முகாம்கள் ஈரோடு மாவட்டத்துக்கு உள்பட்ட 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சனிக்கிழமை நடைபெறும்.
முதல்முறை, இளம் வாக்காளா்களின் வாக்காளா் பட்டியல் சோ்க்கையை அதிகரிக்கும் வகையில், நகா்ப்புற பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களுக்கு சிறப்பு கவனம் அளிக்கப்படும். தகுதியுடைய இளம் மற்றும் முதல்முறை வாக்காளா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்கும், அவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கு வசதியாகவும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள தோ்தல் கல்வியறிவுக் குழுக்களின் சேவைகள் திறம்பட செயல்படுத்தப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்ட நபா்கள் மற்றும் தகுதி வாய்ந்தவா்கள், முதல்முறை வாக்காளா்கள் தங்கள் பெயா்களை பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

