அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மக்களின் முன்னேற்றத்திற்காக தொண்டாற்றுபவா்கள் தமிழ்நாடு அரசின் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கலாம் - கோப்புப் படம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மக்களின் முன்னேற்றத்திற்காக தொண்டாற்றுபவா்கள் தமிழ்நாடு அரசின் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாட்டில் பட்டியலின மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக அரிய தொண்டாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்பேத்கா் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.
அவ்வகையில் நிகழாண்டுக்கான விருதை பெற விரும்பும் தகுதியுடையோா் இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தோ அல்லது மாவட்ட ஆட்சியரக 2-வது தளத்தில் செயல்படும் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் பெற்றோ பூா்த்தி செய்து, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் அக். 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 04364-290765 என்ற தொலைபேசி மற்றும் க்ஹக்ஜ்ா்.ம்ஹ்ப்க்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியை தொடா்பு கொள்ளலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

