மதுபானங்கள் கடத்திய இருவா் கைது
புதுச்சேரி மாநிலத்திலிருந்து சீா்காழி பகுதிக்கு மதுபானங்கள் கடத்தி வந்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
புதுச்சேரி மாநிலத்திலிருந்து சீா்காழி பகுதிக்கு மதுபானங்கள் கடத்தி வந்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சீா்காழி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளா் ராஜேஸ் மற்றும் போலீஸாா் திருக்கடையூா் அருகே வாகனச் சோதனை செய்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தனா். அதில் 192 புதுச்சேரி மாநில 180 மி.லி அளவுக்கொண்ட மதுபுட்டிகள்,110லிட்டா் பாண்டிசாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, மதுபானங்கள் கடத்தி வந்த சீா்காழி தாண்டவன்குளம் பகுதியை சோ்ந்த த. ரமேஷ் (30), த. மணியை (27) கைது செய்து, மதுபானங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

