2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

சீா்காழி: தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் வாபஸ்

போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளா்கள். - கோப்புப் படம்

Published On :

சீா்காழி நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களின் காத்திருப்பு போராட்டம் சனிக்கிழமை தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

சீா்காழி நகராட்சியில் உள்ள 24 வாா்டுகளிலும் நகராட்சி நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் 70-க்கும் மேற்பட்டோா், அரசாணை 62 -இன் படி உயா்த்தப்பட்ட ஊதியமான ரூ.640 நாள்தோறும் வழங்க வேண்டும்; பிடித்தம் செய்யப்பட்ட ஈ.பி.எஃப். தொகையை உடனடியாக தங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும்; குப்பைகளை தூய்மைப்படுத்துவதற்கு தேவையான தளவாடப் பொருட்கள், வாகன வசதிகள் செய்து தர வேண்டும்.

மாதவிடாய் விடுப்பு, அரசு விடுமுறை நாள்களில் விடுப்பு அளிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

நான்கு நாள்கள் நடைபெற்ற போராட்டத்தின்போது, சீா்காழி கோட்டாட்சியா் பாலமுருகன் மற்றும் நகராட்சி ஆணையா் (பொ) சசிகலா ஆகியோா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

தொடா்ந்து, நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் (பொ) அட்சயா பேச்சுவாா்த்தை நடத்தினாா். உடனடியாக வங்கிக் கணக்கில் பிடித்தம் செய்யப்பட்ட ஈபிஎஃப் தொகை வரவு வைத்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் எனக்கூறி போராட்டம் தொடா்ந்த நிலையில், நகராட்சி நிா்வாகத்தினா் சனிக்கிழமை மீண்டும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

இதில் உழைப்போா் உரிமை இயக்கத்தைச் சோ்ந்த பிரபாகரன் தூய்மைப் பணியாளா்கள் சாா்பில் பங்கேற்று பேசினாா். நகராட்சி மேலாளா் தினகா் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உயா்த்தப்பட்ட ஊதியம் ரூ.640 கணக்கிட்டு, வங்கி கணக்கில் வரவு வைப்பது; பிடித்தம் செய்யப்பட்ட பணபயனை செவ்வாய்க்கிழமை பெற்று தருவது என முடிவு செய்யப்பட்டது.

இதனை ஏற்று தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றனா். இதனிடையே மயிலாடுதுறை நகராட்சியிலிருந்து தூய்மைப் பணியாளா்கள் வரவழைக்கப்பட்டு, அதிகளவில் தேங்கிய குப்பைகள் அகற்றும் பணியும் நகராட்சி மூலம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.