டெல்லி கேப்பிடல்ஸ் தலைமைப் பயிற்சியாளராக கங்குலி நியமனம்!இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது! ராகுல், பிரியங்கா தொடர்ந்து பேரணி!தேர்தல் ஆணையம் நோக்கி சென்ற எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்! சாலையில் அமர்ந்து தர்னா!கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகல்!

குடிபோதையில் வீடு புகுந்து தாக்கிய 2 பேர் கைது

கீழ்வேளூர் அருகே குடிபோதையில் வீட்டுக்குள் புகுந்து தாக்கிய இருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

Published On :

கீழ்வேளூர் அருகே குடிபோதையில் வீட்டுக்குள் புகுந்து தாக்கிய இருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது:

கீழ்வேளூர், தேவூர், குயவர் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் விஜயகுமார் (58). வியாழக்கிழமை இரவு இவரது வீட்டு வாசல் முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சிலர் மதுபோதையில் சத்தம் போட்டபடி இருந்தனராம். இதுகுறித்து அவர்களிடம் விஜயகுமார் கேட்டபோது, தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மதுபோதையில் இருந்தவர்கள் விஜயகுமாரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கையாலும், அரிவாளாலும் தாக்கியுள்ளனர்.

பின்னர் வாசலில் இருந்த படிக்கட்டு மற்றும் அதில் இருந்த பொருள்களை சேதப்படுத்தி உள்ளனர்.

இதையடுத்து விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீஸார், அதே பகுதியைச் சேர்ந்த ராஜாங்கம் மகன் கண்ணன் (50), ரங்கசாமி மகன் பழனிவேல் (30) உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிந்து கண்ணன், பழனிவேல் ஆகியோரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.