அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா, நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு வழக்குகளில் இன்று தீா்ப்புமேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று வாக்கு எண்ணிக்கை!மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்

மீனவக் கிராமங்களில் சுனாமி தடுப்பு ஒத்திகை

காரைக்கால் அருகேயுள்ள பட்டினச்சேரி மீனவக் கிராமத்திலும், பூம்புகாரிலும் சுனாமி தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

Published On :

காரைக்கால் அருகேயுள்ள பட்டினச்சேரி மீனவக் கிராமத்திலும், பூம்புகாரிலும் சுனாமி தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

காரைக்காலில்...சுனாமி தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சிக்காக, தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர் (அரக்கோணம்), முதுநிலை கமாண்டன்ட் ரேகா நம்பியார் தலைமையில் காரைக்கால் வந்திருந்தனர். 

பட்டினச்சேரி கிராமத்தில் ஆழிப்பேரலை புகுந்துவிட்டதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைக்க செய்யப்பட்டது.

ஆட்சியர் இ. வல்லவன் உத்தரவின்பேரில், மாவட்ட மீட்புக் குழுவை சேர்ந்த துறையினர் பட்டினச்சேரிக்கு விரைந்தனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் விரைந்து சென்றனர்.

கிராமத்தில் தண்ணீரில் சிக்கியவர்களை விரைவு வாகனம் வரவழைத்து எப்படி காப்பாற்றி அனுப்புவது, பாதிக்கப்பட்ட மக்களை எப்படி கையாளுவது, அவர்களுக்கு சுகாதாரத் துறையினர் அளிக்கும் சிகிச்சைகள் உள்ளிட்டவை செயல்விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது.

இதுபோன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களின் ஒத்துழைப்பு என்ன, மாவட்ட மீட்புக் குழுவினர் பங்களிப்பு எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் செயல்விளக்கமாக செய்துக் காட்டினர். ஆட்சியர் இ. வல்லவன், அந்த இடத்திற்கு சென்று ஒத்திகை செயல்பாடுகளை பார்வையிட்டார். கூடுதல் ஆட்சியர் எல். முகம்மது மன்சூர், துணை ஆட்சியர் எஸ்.மாணிக்கதீபன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.பி.பழனிவேலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பூம்புகாரில்... சீர்காழியை அடுத்த பூம்புகார் மீனவ கிராமத்தில் சுனாமி எச்சரிக்கை விழிப்புணர்வு செயல்விளக்கம் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணைக்குழு உத்தரவின்பேரில் இந்த விழிப்புணர்வு செயல் விளக்க நிகழ்ச்சி ஆட்சியர் சு. பழனிசாமி முன்னிலையில் நடைபெற்றது.

பேரிடர் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மக்கள் செய்ய வேண்டியது என்ன, மீட்புக் குழுவினரின் பணி, ஆட்சியரின் பணி உள்ளிட்டவை தொடர்பாக செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

அரக்கோணம் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பேரிடர் பாதிப்பில் சிக்கியோரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கும் செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் சுனாமி வந்தால் பொதுமக்கள் எவ்வாறு பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்களை பாதுகாத்துக்கொள்வது என பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று செயல்விளக்கம் அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ராமசாமி, மயிலாடுதுறை கோட்டாட்சியர் கிருஷ்ணம்மாள், அரக்கோணம் பேரிடர் மேலாண்மை அதிகாரி வர்மா, சீர்காழி டி.எஸ்.பி வெங்கடேசன்,மாவட்ட கடலோர பாதுகாப்புபடை அதிகாரி ஞானசேகரன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் முகுந்தன், பேரிடர் மேலாண்மை மாநில திட்ட அலுவலர் கிலாரிபெல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சி பயனுள்ளதாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.