அதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு:உயர் நீதிமன்ற நீதிபதி மதிவாணன் பேச்சு

தண்டனைகள் குறைவாக இருப்பதால்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.மதிவாணன் கூறினார்.

Updated On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

தண்டனைகள் குறைவாக இருப்பதால்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.மதிவாணன் கூறினார்.

சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள், குடியிருப்புகள் ரூ. 5.30 கோடியே 20 ஆயிரம் மதிப்பில் கட்டப்படவுள்ளன.

இதற்கான பூமிபூஜை நாகை மாவட்ட நீதிபதி கே.சிவக்குமார் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சீர்காழி வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.சுந்தரய்யா, செயலாளர் ஆர்.சிங்காரவேலன், மயிலாடுதுறை வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் இராம.சேயோன், வேலு.குணவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா பூமிபூஜையில் பங்கேற்று புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.மதிவாணன் பங்கேற்றுப் பேசியது:

வாழ்வில் கடின உழைப்பு இருந்தால்தான் உயர்வான இடத்தை எட்ட முடியும். சட்டம் உறுதியானது. ஒரு கிரேக்க கவிஞர் கூறியதுபோல் அன்றைய காலத்தில் மரச் சட்டமாக இருந்தவை தற்போது ரப்பர் சட்டமாக வளைந்து கொடுக்கும் வகையில் சட்டம் உள்ளது.

சமுதாயத்துக்கு ஏற்றவாறும், மக்களின் தேவைக்கு ஏற்பவும் சட்டம் மாறிக் கொண்டிருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு தண்டனைகள் குறைவாக இருப்பதுதான் காரணம் என்றார்.

விழாவில் உதவி காவல் கண்காணிப்பாளர் தங்கத்துரை, சீர்காழி துணைக் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன், வழக்குரைஞர்கள் என்.சந்திரமோகன், எம்.பன்னீர்செல்வம், தியாகராஜன், ரோட்டரி சங்கத் தலைவர் சாமி.செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.