பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி: கால அவகாசம் அளிக்க கோரிக்கை

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு, பணியை நிறைவு செய்ய கால அவகாசம் வழங்க வேண்டுமென தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

Published On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு, பணியை நிறைவு செய்ய கால அவகாசம் வழங்க வேண்டுமென தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் நாகை மாவட்டச் செயலாளர் மு.லெட்சுமிநாராயணன், நாகை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் தொடக்கக் கல்வி ஆசிரியர்களே பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பலருக்கு இதுவரை, கணக்கெடுப்புப் பணிக்கான முறையான உத்தரவு கூட வழங்கப்படவில்லை. இதனால், தலைமை ஆசிரியர்களுக்கும், கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் சூழல் உள்ளது.

இந்தக் கணக்கெடுப்புப் பணியை எந்த நேரத்தில் மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக மாவட்ட அளவில் ஒரே மாதிரியான நடைமுறை இல்லை. தற்போது, வேளாண் பணிக் காலமாக இருப்பதால், விவசாயத் தொழிலாளர்கள் இரவு நேரங்களில்தான் வீடு திரும்புகின்றனர். இதனால், கணக்கெடுப்புப் பணியை விரைவுப்படுத்த முடியாத நிலை உள்ளது.

கணக்கெடுப்புப் பணி தொடர்பாக தெளிவான நடைமுறைகள் இல்லாத நிலையில், கணக்கெடுப்புப் பணியை உடனடியாக நிறைவு செய்ய வேண்டும் என வருவாய்த் துறை அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு நெருக்கடி அளிப்பது பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

எனவே, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியை நிறைவு செய்ய ஆசிரியர்களுக்கு உரிய கால அவகாசம் அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டுமென அந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.