சீர்காழியை அடுத்த வள்ளுவக்குடியில் வருவாய்த்துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சீர்காழி ஊராட்சி ஒன்றியம், வள்ளுவக்குடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமுக்கு உதவி ஆணையர் (கலால்) வெங்கேடசன் தலைமை வகித்தார். சீர்காழி வட்டாட்சியர் பாலமுருகன், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் ராம்குமார், குடிமைப் பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் பிரேமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் சீர்காழி சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி பங்கேற்று 35 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும், 12 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான சான்றும், 15 பேருக்கு ஸ்மார்ட் கார்டும் வழங்கிப் பேசினார். தொடர்ந்து பொது சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டன. வேளாண்மை மற்றும் தோட்டகலைத்துறை சார்பில் இலவச தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன.
இதில் வட்டார மருத்துவ அலுவலர் கனிமொழி, ஒன்றிய அதிமுக செயலர் ராஜமாணிக்கம், பேரூர் கழகச் செயலாளர் போகர் சி. ரவி, நகரச் செயலர் அ. பக்கிரிசாமி, ஒன்றிய எம்ஜிஆர் மன்றச் செயலர் திருமாறன், ஊராட்சி செயலர் பரசுராமன் ஆகியோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.