நாகூரில் நாகை மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நாகூர் வெட்டாறில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தலைமை வகித்தார். இதில் பேரிடர் காலங்களில் மக்களுக்கு எவ்வாறு உதவுவது, தண்ணீரில் தத்தளிப்பவர்களை மீட்பது குறித்து செயல் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
அப்போது நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் கூறியது: நாகை மாவட்டத்தில் மீட்புப் பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மீட்புக் குழுவிலும் 1 உதவி ஆய்வாளர் தலைமையில் 8 காவல் ஆளினர்கள், ஊர்காவல் படையினர், வருவாய்த்துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, மீன்வளத்துறை, சுகாதாரத்துறை, வனத்துறை ஆகியோரும் சேர்ந்துப் பணியாற்றுவர். இந்த மீட்புப் பணியை மேற்கொள்ள படகு, மரம், அறுவை இயந்திரம், ரம்பம், கோடாரிகள் உள்ளிட்ட அனைத்து மீட்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் நாகை, வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, பொறையாறு, சீர்காழி, தலைஞாயிறு ஆகிய இடங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.