தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மழை பாதிப்பு: மீனவ கிராமங்களில் அமைச்சர் ஆய்வு

சீர்காழி அருகே பழையார் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மழை பாதிப்பு குறித்து புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஓ.எஸ். மணியன், குடியிருப்பு

News image
Updated On :2 நவம்பர் 2017, 2:18 am

DIN

சீர்காழி அருகே பழையார் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மழை பாதிப்பு குறித்து புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஓ.எஸ். மணியன், குடியிருப்பு பகுதிகளில்  தேங்கிய மழைநீரை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
சீர்காழி மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் கடந்த 3 நாள்களாக பெய்த தொடர் மழையால் பழையார் சுனாமிநகர் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த பகுதிகளை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  அப்போது,  அப்பகுதியில் தேங்கிய மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
பின்னர் பழையபாளையம், நல்லூர், புளியந்துறை பகுதிகளில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள விளை நிலங்களையும், தாண்டவன்குளம் கிராமத்தில் கடலில் முடவனாறு சங்கமிக்கும் இடம் மற்றும் பழையபாளையம் வடிகால் வாய்க்கால் கிட்டியணை ஆகியவற்றை பார்வையிட்டார்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
மீனவர்கள், விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் கடற்கரையோரம் வடிகால் வாய்க்காலில் முகப்புகளை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகள் தற்போது நேரடி நெல் விதைப்பு செய்துள்ளதால் இந்த மழை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
இந்த ஆய்வில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்  சுரேஷ்குமார் கூறியது:
நாகை மாவட்டத்தில் பெய்துவரும் கன மழையால் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் 24 மணி நேரமும் பொதுப்பணித் துறை, மின் துறை, மருத்துவக் குழுக்கள், கால்நடை மருத்துவக் குழுக்கள் தயாராக உள்ளன. மழையால் பாதிப்பு ஏற்பட்டால் ஆட்சியர் அலுவலகத்துக்கு தெரிவிக்கலாம் என்றார்.
இந்த ஆய்வின்போது,  சீர்காழி எம்எல்ஏ பி.வி. பாரதி, மயிலாடுதுறை சார் ஆட்சியர் பிரியங்கா, மாவட்ட திட்ட இயக்குநர் சங்கர், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர்
பாலசுப்பிரமணியன், வட்டாட்சியர் பாலமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.