மின் மோட்டார்கள் பறிமுதல்

சீர்காழி அருகே கொள்ளிடம் பகுதியில் முறைகேடாக தண்ணீர் எடுக்க பயன்படுத்திய 9 மின் மோட்டார்களை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்து இணைப்பைத் துண்டித்தனர்.
Updated on
1 min read

சீர்காழி அருகே கொள்ளிடம் பகுதியில் முறைகேடாக தண்ணீர் எடுக்க பயன்படுத்திய 9 மின் மோட்டார்களை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்து இணைப்பைத் துண்டித்தனர்.
கொள்ளிடம் பகுதியில் ஒன்றிய ஆணையர் நக்கீரன், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு உதவியாளர் ரவி, ஊராட்சி செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் கொள்ளிடம் கூட்டு குடிநீர்க் குழாய்கள் மூலம் குடிநீர் முறையாகச் சென்று சேருகிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது புதுப்பட்டினம், தற்காஸ், தோணித்துறை ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி குடிநீர் இணைப்பு ஏற்படுத்தி, மின் மோட்டார்கள் மூலம் குடிநீரை திருடப்படுவது தெரிய வந்ததையடுத்து, அந்த 9 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com