கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

பாமக ஒன்றிய  பொதுக்குழுக் கூட்டம்

சீர்காழி அருகேயுள்ள மாதானம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஏப்ரல் 2018, 3:24 am

சீர்காழி அருகேயுள்ள மாதானம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாமக பொறுப்பாளர் தேக்கு தியாகராஜன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் ராஜதுரை, ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்        தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் தயாகோவிந்தசாமி சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், கொள்ளிடம் அருகேயுள்ள கொடக்காரமூலை அரசு உயர்நிலைப்பள்ளிக்குச் செல்ல சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். மாதானம் கிராமத்திலிருந்து அரிவலூர் செல்லும் சாலையைச் சீரமைக்க வேண்டும். பழையபாளையம், தாண்டவன்குளம், புதுப்பட்டினம், கொட்டாய்மேடு, தொடுவாய் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையைப் போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்ட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.