
மயிலாடுதுறைக்கு வந்த துணை முதல்வருக்கு அதிமுகவினர் வரவேற்பு
நாகை மாவட்டம், மயிலாடுதுறைக்கு புதன்கிழமை வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான
நாகை மாவட்டம், மயிலாடுதுறைக்கு புதன்கிழமை வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வத்துக்கு நாகை மாவட்ட அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பூம்புகார் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ். பவுன்ராஜின் இல்லத் திருமண விழா, திருக்கடையூரில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இவ்விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள், மக்களவை மற்றும் சட்டப் பேரவை உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில், இவ்விழாவில் பங்கேற்கும் ஓ. பன்னீர்செல்வம், புதன்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில், சோழன் விரைவு ரயில் மூலம் மயிலாடுதுறைக்கு வந்தார்.
நாகை மாவட்ட அதிமுக சார்பில் வரவேற்பு... ஓ. பன்னீர்செல்வத்தின் வருகையை முன்னிட்டு, அதிமுக நாகை மாவட்டச் செயலாளரும், தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சருமான ஓ.எஸ். மணியன் தலைமையில் திரண்டிருந்த அதிமுகவினர் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார், தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு பூச்செண்டுக் கொடுத்து வரவேற்பளித்தார். இதில், மக்களவை உறுப்பினர் ஆர்.கே. பாரதிமோகன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் வீ. ராதாகிருஷ்ணன், பி.வி. பாரதி, வருவாய்க் கோட்டாட்சியர் கோ. தேன்மொழி, வட்டாட்சியர் து. விஜயராகவன், முன்னாள் அமைச்சர் கே.ஏ. ஜெயபால், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஏ.சி.என். விஜபாலன், என். ரெங்கநாதன், எஸ். ஆசைமணி, எம். சக்தி, நகர அதிமுக செயலாளர் விஜிகே. செந்தில்நாதன், ஒன்றியச் செயலாளர்கள் பா. சந்தோஷ்குமார் (மயிலாடுதுறை தெற்கு), சி. ராஜேந்திரன் (குத்தாலம் வடக்கு), என். தமிழரசன் (குத்தாலம் தெற்கு), பேரூராட்சி செயலாளர் எம்.சி. பாலு (குத்தாலம்) மற்றும் அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள், மகளிரணியினர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





