தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

புதைவட மின் விநியோகத் திட்டப் பணிகளை தொடங்க வேண்டும்: வர்த்தக தொழிற்குழுமம் கோரிக்கை

புயல் சீற்றப் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, நாகைக்கு ஏற்கெனவே அறிவித்த, புதைவட மின் விநியோகத்

Updated On :25 டிசம்பர் 2018, 8:46 am IST

புயல் சீற்றப் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, நாகைக்கு ஏற்கெனவே அறிவித்த, புதைவட மின் விநியோகத் திட்டப் பணிகளை அரசு விரைந்து தொடங்க வேண்டும் என, நாகை இந்திய வர்த்தகத் தொழிற்குழுமம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாகை, இந்திய வர்த்தக தொழிற்குழும செயற்குழுக் கூட்டம், நாகையில் அண்மையில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் வி. ராமச்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் சுபாஷ்சந்திரன், துணைத் தலைவர் டி. மதியழகன், இணைச் செயலாளர் எஸ்.எம்.ஏ. கணேசன், பொருளாளர் எஸ். தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தீர்மானங்கள்: நாகை மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செயல்பாட்டுக்காக உயர் அழுத்த மின் மாற்றி அமைக்கவும், சிடி ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவுக்கு உடனடியாக மருத்துவரை நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலம் அமைப்புப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். 
நாகை பெரிய கடைத் தெருவில் தரைக்கடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, ஆசாத் மார்க்கெட், பழைய அந்திக்கடை, நாகை பழையப் பேருந்து நிலையம் பகுதிகளில் தரைக்கடைகளுக்குத் தனி இடம் ஒதுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
புயல் சீற்றம் போன்ற இயற்கைப் பேரிடர்களைக் கருத்தில் கொண்டு நாகை, நாகூர், வெளிப்பாளையம் ஆகிய பகுதிகளில் புதைவடம் மூலம் மின் விநியோகம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. 
ஆனால், அந்தத்  திட்டப்  பணிகள் ஏதும் தொடங்கப்படாமல் உள்ளன. எனவே, நாகையில் புதைவட மின் விநியோகத் திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்த அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.