தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

திருமருகல் அருகே குளத்தில் மர்ம திரவம் கலப்பு

நாகை மாவட்டம், திருமருகல் அருகே உள்ள குளத்தில் மர்ம திரவம் கலந்திருப்பது ஞாயிற்றுக்கிழமை காலை தெரியவந்தது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 3:11 am

DIN

நாகை மாவட்டம், திருமருகல் அருகே உள்ள குளத்தில் மர்ம திரவம் கலந்திருப்பது ஞாயிற்றுக்கிழமை காலை தெரியவந்தது.
திருமருகல், அண்ணாமண்டபம் பிரதான சாலையில் உள்ளது பிள்ளைத்திருவாசல் குளம்.   இக்குளத்தில், ஒரு தனியார் அமைப்பு சார்பில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த நிலையில், இக்குளத்தில் எண்ணெய்க்கரைசல் மற்றும் வர்ணக் கரைசல் ஆகியன மிதப்பதும், பெரும் துர்நாற்றம் வீசியதும் ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
குளத்தின் மேற்பரப்பு முழுமையும் எண்ணெய்க் கரைசல் பரவியிருப்பதால், குளத்தில் வளர்க்கப்படும் மீன்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இதன்மூலம் சுமார் ரூ. 50 ஆயிரத்துக்கும் அதிகமான மதிப்பில் சேதம் ஏற்படும் எனக் கருதப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த திட்டச்சேரி போலீஸார் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் குளத்தைப் பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டனர். மர்ம நபர்கள் யாரேனும், குளத்தில் பெயிண்ட் கரைசலை அல்லது குருடாயிலை ஊற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.