சிலைக் கடத்தல் வழக்கில் சரணடைந்த இருவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் பேரிகை சாலையில் உள்ள முத்துராயசுவாமி கோயிலில் 4 சுவாமி சிலைகள் திருடப்பட்ட வழக்கில்


கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் பேரிகை சாலையில் உள்ள முத்துராயசுவாமி கோயிலில் 4 சுவாமி சிலைகள் திருடப்பட்ட வழக்கில் கர்நாடகத்தைச் சேர்ந்த வாசிம்அக்ரம், சேட்டு என்கிற ஜபா, ஜனோ என்கிற சாவூத் , சமீர் ஆகிய நால்வரையும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தேடி வந்தனர். இதில் வாசிம் அக்ரம் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து உடைக்கப்பட்ட சிலையின் பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனையடுத்து தலைமறைவான மற்ற மூவரில் சமீர் மற்றும் ஜனோ (எ) சையது சாவூத் ஆகிய இருவரும் பாகலூர் கிராம நிர்வாக அலுவலரிடம் சனிக்கிழமை சரணடைந்தனர்.
அவர் அளித்த தகவலின் பேரில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஒசூர் சென்று இருவரையும் கைது செய்து கும்பகோணம், சிலை திருட்டு தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சேட்டு என்கிற ஜபா மட்டும் இன்னும் சிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...