எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தினமணி செய்தி எதிரொலி: பயன்பாட்டுக்கு வந்தது நெல்கொள்முதல் நிலையம்

வேதாரண்யம் அருகேயுள்ள தென்னடார் ஊராட்சியில் புதிதாகக் கட்டப்பட்டு திறக்காமலிருந்த நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா என்று

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 3:12 am

DIN

வேதாரண்யம் அருகேயுள்ள தென்னடார் ஊராட்சியில் புதிதாகக் கட்டப்பட்டு திறக்காமலிருந்த நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா என்று தினமணியில் செய்தி வெளியானதன் எதிரொலியாக ஞாயிற்றுக்கிழமை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். 
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள தென்னடார் ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் செயல்படும் நேரடி நெல்கொள் முதல் நிலையம் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி ரூ. 34 லட்சத்தில் நிரந்தரக் கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவராமல் இருந்தது. இதுதொடர்பாக ஜன.24-ஆம் தேதி தினமணியில் செய்தி பிரசுரமானது. 
இதையடுத்து, கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் மின் இணைப்பு வழங்கும் பணிகள்  தீவிரப்படுத்தப் பட்டன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமையில், புதிய நேரடி நெல்கொள்முதல் கட்டடத்தை அமைச்சர் ஓ.எஸ். மணியன் திறந்து வைத்துப் பேசியது: 
நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம்  2017-2018 சம்பா பருவத்துக்கு இதுவரை 109 நேரடி நெல் கொள்முதல்  நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 
மேலும், 86 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளது. மேலும், நாகை மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை சேமித்து வைக்க 12 திறந்தவெளி சேமிப்பு மையங்கள் பயன்பாட்டில் உள்ளன என்றார் அவர். 
முன்னதாக சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ. 8.25 லட்சம் மதிப்பீட்டில் பொது விநியோகக் கடைக்கு  கட்டப்பட்ட நிரந்தரக் கட்டடத்தை அமைச்சர் திறந்து வைத்தார். 
நிகழ்ச்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜசேகரன், வேதாரண்யம் வட்டாட்சியர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் நா. சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.