திருமருகல் அருகே குளத்தில் மர்ம திரவம் கலப்பு
நாகை மாவட்டம், திருமருகல் அருகே உள்ள குளத்தில் மர்ம திரவம் கலந்திருப்பது ஞாயிற்றுக்கிழமை காலை தெரியவந்தது.


நாகை மாவட்டம், திருமருகல் அருகே உள்ள குளத்தில் மர்ம திரவம் கலந்திருப்பது ஞாயிற்றுக்கிழமை காலை தெரியவந்தது.
திருமருகல், அண்ணாமண்டபம் பிரதான சாலையில் உள்ளது பிள்ளைத்திருவாசல் குளம். இக்குளத்தில், ஒரு தனியார் அமைப்பு சார்பில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த நிலையில், இக்குளத்தில் எண்ணெய்க்கரைசல் மற்றும் வர்ணக் கரைசல் ஆகியன மிதப்பதும், பெரும் துர்நாற்றம் வீசியதும் ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
குளத்தின் மேற்பரப்பு முழுமையும் எண்ணெய்க் கரைசல் பரவியிருப்பதால், குளத்தில் வளர்க்கப்படும் மீன்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் ரூ. 50 ஆயிரத்துக்கும் அதிகமான மதிப்பில் சேதம் ஏற்படும் எனக் கருதப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த திட்டச்சேரி போலீஸார் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் குளத்தைப் பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டனர். மர்ம நபர்கள் யாரேனும், குளத்தில் பெயிண்ட் கரைசலை அல்லது குருடாயிலை ஊற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...