நல்வாழ்வு முகாமிலிருந்து திரும்பிய மயிலாடுதுறை கோயில் யானைக்கு சிறப்பு பூஜை

கோவை மாவட்டம், தேக்கம்பட்டியில் நடைபெற்ற யானைகள் நல்வாழ்வு முகாம் நிறைவுபெற்றதையடுத்து, மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலுக்கு புதன்கிழமை வந்த யானை அபயாம்பிகைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
Updated on
1 min read

கோவை மாவட்டம், தேக்கம்பட்டியில் நடைபெற்ற யானைகள் நல்வாழ்வு முகாம் நிறைவுபெற்றதையடுத்து, மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலுக்கு புதன்கிழமை வந்த யானை அபயாம்பிகைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் கோவை , மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் யானைகள்  நல்வாழ்வு முகாம்  நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டுக்கான யானைகள் நல்வாழ்வு முகாம் ஜன. 4 முதல் பிப். 20-ஆம் தேதி வரை  நடைபெற்றது.
இம்முகாமில் பங்கேற்ற மயிலாடுதுறை அருள்மிகு அபயாம்பிகை உடனுறை மயூரநாதர்  திருக்கோயில்  யானை அபயாம்பிகை புதன்கிழமை கோயிலுக்கு திரும்பியது. 
லாரியில் ஏற்றப்பட்டு, பாதுகாப்புடன், கோயிலுக்கு கொண்டு வரப்பட்ட யானை அபயாம்பிகைக்கு, மயூரநாதர் கோயில் வளாகத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சியில்  கோயில் நிர்வாகத்தினர், பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com