வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கோயில் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

கோயில் பாதுகாப்புப் பணிக்குத் தகுதியான முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:50 am

DIN

கோயில் பாதுகாப்புப் பணிக்குத் தகுதியான முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : நாகை மாவட்டத்தில் 54 கோயில் இரவுப் பாதுகாப்புப் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு 58 வயதுக்குள்பட்ட, நல்ல திடகாத்திரமான நிலையில் உள்ள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம். 
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள், நாகை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். தற்போது கோயில் பாதுகாப்புப் பணியில் உள்ளவர்களும் தங்கள் விவரங்களைப் பதிவு செய்திட வேண்டும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.