நாகை மாவட்ட நேரு யுவகேந்திராவின் தேசிய இளையோர் தொண்டர் பணிக்கு சமூகப் பணியில் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இதுகுறித்து நாகை மாவட்ட நேரு யுவகேந்திரா இளையோர் ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு : நாகை மாவட்ட நேரு யுவகேந்திராவின் தேசிய இளையோர் தொண்டர் படைக்கு சமூகப் பணியில் ஆர்வம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18 முதல் 28 வயதுக்குள்பட்ட, 10-ஆம் வகுப்பு முதல் முதுநிலை பட்டதாரிகள் வரையிலான நிலைகளில் கல்வி பயின்ற ஆண், பெண் இருபாலரும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். பணிக்குத் தேர்வுப் பெறுவோருக்கு மாத ஊதியமாக ரூ. 5 ஆயிரம் வீதம் மதிப்பூதியம் வழங்கப்படும். பணிக்கான விண்ணப்பங்களை மாவட்ட நேரு யுவகேந்திரா அலுவலகத்திலிருந்து நேரடியாக பெற்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, மதிப்பெண் சான்று, சாதிச் சான்று ஆகியவற்றின் நகல்களையும், 3 மார்பளவு புகைப்படங்களையும் இணைத்து, மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் நேரு யுவகேந்திரா, நெ.27/28 சட்டையப்பர் தெற்குவீதி, நாகப்பட்டினம் என்ற முகவரியில் நேரில் சமர்பிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

தவெகவில் இணையும் விஜயபாஸ்கர்? அமைச்சர் ஆனந்த் உடன் சந்திப்பு
தாயாவதை உறுதி செய்தார் சமந்தா! மகப்பேறு விடுமுறை எடுப்பதாகப் பேச்சு!

வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை அதிகரித்த பந்தன் வங்கி!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


