வேதாரண்யத்தை மையமாக கொண்டு மாவட்ட கல்வி அலுவலகம் அமைக்க வேண்டும் என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
வேதாரண்யத்தில் அண்மையில் நடைபெற்ற தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி வரையிலான அகல ரயில் பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும், வேதாரண்யத்தை மையமாக கொண்டு தலைஞாயிறு, கீழையூர் ஒன்றியங்களை இணைத்து மாவட்ட கல்வி அலுவலகத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், ஆசிரியர்களுக்கான ஆயுள் காப்பீடுத் திட்டத்துக்கான பிரிமியத் தொகையை வழக்கம்போல வட்டாரக் கல்வி அலுவலகம் மூலம் பிடித்தம் செய்து செலுத்தவேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டணியின் தலைவர் இரா. சரவணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வட்டாரச் செயலர் சி. முத்துசாமி, மாவட்டச் செயலர் ப. பார்த்தசாரதி, மாநில துணைச் செயலர் என். வீரராகவன், நிர்வாகிகள் ஆர். குருபரன்உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், கனவு ஆசிரியர் விருதுபெற்ற ஆசிரியர் க. சுப்பிரமணியன் பாராட்டப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சர்தார் - 2 வெளியீட்டுத் தேதி!

மூன்று முடிச்சு தொடரில் இணைந்த நடிகை சஹானா!

மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளிகள் கைது!

முதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


