தவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

கூட்டுறவு வங்கி ஜன்னல் கதவை உடைத்த அமமுகவினர் 3 பேர் மீது வழக்குப் பதிவு

நீடூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஜன்னல் கதவை உடைத்து சேதப்படுத்தியதாக அமமுகவைச் சேர்ந்த 3 பேர் மீது

Updated On :29 மார்ச் 2018, 4:01 am

நீடூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஜன்னல் கதவை உடைத்து சேதப்படுத்தியதாக அமமுகவைச் சேர்ந்த 3 பேர் மீது மயிலாடுதுறை போலீஸார் புதன்கிழமை வழக்குப்  பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
நீடூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இயக்குநர்கள் பதவிக்காக வேட்பு மனுக்கள் அளித்த அமமுகவைச் சேர்ந்த அருள், ராமலிங்கம், ராமையன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் உரிய காரணமின்றி நிராகரிக்கப்பட்டதாக  கூறப்படுகிறது. இதுதொடர்பாக புதன்கிழமை வங்கிக்கு சென்று விளக்கம் கேட்டபோது, அமமுக வினருக்கும் தேர்தல் அலுவலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அமமுகவினர் வங்கியின் ஜன்னல் கதவை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 
இதுகுறித்து, வங்கிச் செயலர் ரா. பரதன் (51) வங்கி ஜன்னல் கதவு சேதப்படுத்தி, பணி செய்யவிடாமல் தடுத்ததாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் அமமுகவைச் சேர்ந்த எஸ். செந்தமிழன், ரா. ராஜா, அருள் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.