சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

மன்னார்குடி அருகேயுள்ள எம்பேத்தி ஊராட்சியில் அதிகரித்து வரும் குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி பொதுமக்

News image
Updated On :14 மே 2018, 11:53 pm

DIN

மன்னார்குடி அருகேயுள்ள எம்பேத்தி ஊராட்சியில் அதிகரித்து வரும் குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
எம்பேத்தி ஊராட்சிப் பகுதியில் சுமார் ஆறு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளது. கடந்த மூன்று மாதமாக நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால், சில மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் இயக்காததால் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை நீடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த சில நாள்களாக அனைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளிலும் குடிநீரேற்ற முடியாமல் குடிநீர் விநியோகம் தடை ஏற்பட்டது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் அருகில் உள்ள மேலவாசல் ஊராட்சிக்கு மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் பிடித்து சென்றனராம்.
இந்நிலையில், தண்ணீர்த் தட்டுப்பாடு பிரச்னையை சரிசெய்ய வலியுறுத்தி, எம்பேத்தி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் எம்பேத்தி கடைவீதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் நடத்திய சுமுகப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.