வேதாரண்யத்தில் அரசுப் பேருந்தில் பயணிகளிடையே ஏற்பட்ட தகராறை விலக்கி விட்ட நடத்துநர் திங்கள்கிழமை இரவு தாக்கப்பட்டார்.
வேதாரண்யம் அருகேயுள்ள குரவப்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செளரிமுத்து (38). இவர் வேதாரண்யம் - நாகப்பட்டினம் செல்லும் அரசுப் பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு வேதாரண்யத்தில் இருந்து நாகை புறப்பட்ட பேருந்தில் பணியில் இருந்தார். பேருந்து, நாகை சாலையில் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஆண் பயணிகள் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறை விலக்கி விடச் சென்றார்.
அப்போது, தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பயணிகள் சௌரிமுத்துவை தாக்கியதில் தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சௌரிமுத்து வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வேதாரண்யம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைதிப் பூங்காவாக தமிழகம் திகழ திமுக ஆட்சி தொடர வேண்டும்: பிரகாஷ் காரத்

இட ஒதுக்கீடு விவகாரத்தில் நாங்கள் பெண்களுக்கு எதிரானவா்கள்போல பிம்பத்தை உருவாக்க முயற்சி! தேஜஸ்வி யாதவ்
1,730 சமையல் எரிவாயு உருளைகள் பறிமுதல்: 30 போ் கைது

மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை: அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

