நாகை மாவட்டத்தில் தீண்டாமை இல்லாத கிராமமாக தேர்வு செய்யப்பட்ட தேவூர் ஊராட்சிக்குப் பரிசுத் தொகையாக ரூ. 10 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில், 2017-18-ஆம் ஆண்டில் தீண்டாமை இல்லாமல், மதநல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக தேர்வு செய்யப்பட்ட கீழ்வேளூர் வட்டம், தேவூர் ஊராட்சிக்கான பரிசுத் தொகையாக ரூ. 10 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பயனாளி ஒருவருக்கு முதியோர் உதவித் தொகை உத்தரவு, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் 10 பேருக்கு சிறப்பு மடக்கு சக்கர நாற்காலி, பாம்பு கடித்து இறந்த ஒருவரின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதி மூலம் ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலை, ஊரக வளர்ச்சித் துறையில் ஒருவருக்குக் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை ஆகியன வழங்கப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், குறைகளுக்குத் தீர்வுக் கோரியும் பொதுமக்களிடமிருந்து 186 மனுக்களும், மாற்றுத் திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டத்திலிருந்து 17 மனுக்களும் பெறப்பட்டுத் தொடர்புடையத் துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலர் வ. முருகேசன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் எம். வேலுமணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தான் பல்கலை.யில் அட்டகாசம்: கண்ணில் படுவோரை கடித்து குதறும் அணில்!
ரஜினி - 173 படத்திலிருந்து விலகியது ஏன்? சுந்தர். சி விளக்கம்!

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா!
வீடியோக்கள்

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

