மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ரயில் பாதையை மாற்றும் பாய்ண்ட் கோளாறு: ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கொரடாச்சேரி ரயில் நிலையம் பகுதியில், ரயில் தண்டவாளப்பாதையை மாற்றும் பாய்ண்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, ரயில்கள் ஒரு மணி நேரத்துக்கு தாமதமாக புறப்பட்டு சென்றது.

Updated On :21 மே 2018, 8:06 pm

கொரடாச்சேரி ரயில் நிலையம் பகுதியில், ரயில் தண்டவாளப்பாதையை மாற்றும் பாய்ண்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, ரயில்கள் ஒரு மணி நேரத்துக்கு தாமதமாக புறப்பட்டு சென்றது.
மன்னார்குடியிலிருந்து மயிலாடுதுறை வரை செல்லும் பயணிகள் ரயிலுக்காக நீடாமங்கலம் ரயில் நிலையத்தில், திங்கள்கிழமை காலை 8.50 மணிக்கு ரயில்கேட் மூடப்பட்டது. அந்தரயில் சரியாக 9 மணிக்கு நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்குள் வந்து நின்றது. நீண்டநேரமாக ரயில் புறப்படாததால், நீடாமங்கலம் நெடுஞ்சாலையில் இருபுறங்களிலும் பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றது.
இந்நிலையில், ரயில்கள் புறப்படுவதில் ஏற்பட்ட தாமதத்துக்கு கொராடாச்சேரியில், ரயில் தண்டவாளப்பாதையை மாற்றி அமைக்கும் பாயிண்ட் மின்சார மோட்டார் இயங்காததால் சிக்னல் செயல்படவில்லை என்பதால்தான் என்பது தெரியவந்தது. ரயில்பாதை மாற்றும் பாய்ண்டில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய நீண்டநேரம் பராமரிப்பு பணியாளர் முயன்றும், முடியாததால், கைப்பிடியைக் கொண்டு தண்டாவாளப்பாதையை மாற்றி சரி செய்யப்பட்டது.
இதற்கிடையில் பழுதான பாய்ண்ட் சரிசெய்யப்பட்டதையடுத்து, கொரடாச்சேரியில் நின்று கொண்டிருந்த காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயிலும், இதேபோல், திருச்சியிலிருந்து காரைக்கால் வரை செல்லும் பயணிகள் ரயில் அங்கிருந்து சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதைத் தொடர்ந்து, நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த மன்னார்குடி - மயிலாடுதுறை பயணிகள் ரயில் 40 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இதேபோல், நீடாமங்கலத்தில் நின்று கொண்டிருந்த பேருந்து உள்ளிட்ட வாகனப் போக்குவரத்தும் 40 நிமிடத்துக்குப் பிறகு சீரானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.