அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் பார்வையாளர்களுக்கு மேலும் ஒருவாரம் தடை

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின பாதுகாப்பு சரணாலயத்தில் தாழ்வான பரப்பில் மழைநீர் தேங்கியதா

Updated On :12 நவம்பர் 2018, 11:59 pm


நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின பாதுகாப்பு சரணாலயத்தில் தாழ்வான பரப்பில் மழைநீர் தேங்கியதால், பார்வையாளர்களை அனுமதிக்க மேலும் ஒருவாரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோட்டியக்கரையில் வெப்ப மண்டல எல்லைக் கோட்டில் அமைந்துள்ள பசுமை மாறா வனப் பகுதி வன உயிரின பாதுகாப்பு சரணாலயமாக அமையப்பெற்றுள்ளது. இங்கு அரிய வகை வெளிமான், புள்ளிமான், காட்டுப் பன்றி, நரி, மட்டக் குதிரை, குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், வனப் பரப்புக்குள் தாழ்வான பகுதிகள், சாலைகளில் தேங்கிய மழைநீர் வடிவதில் தாமதமானது.
இதையடுத்து, நவ. 5 முதல் 12 -ஆம் தேதி வரையில் வனப் பகுதிக்குள் பார்வையாளர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இதனிடையே, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் வடிவதும், சாலைகளில் வாகனங்கள் செல்ல ஏற்ற சூழல் ஏற்படுவதும் மேலும் தாமதமாகி வருவதால், நவ. 18 -ஆம் தேதி வரை மேலும் ஒருவார காலம் பார்வையாளர்கள் உள்ளே செல்ல தடை நீட்டிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.