மயிலாடுதுறையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கலை இலக்கிய இரவு சனிக்கிழமை மாலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை வரை நடைபெற்றது.
முன்னதாக தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, அங்கிருந்து கலை இலக்கியப் பேரணி தொடங்கியது. தொடர்ந்து அம்பேத்கர், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, அறிஞர் அண்ணா ஆகியோரின் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் நடைபெற்ற கலை இலக்கிய இரவுக்குக் சங்க கிளைத் தலைவர் இரா.தேன்மொழி தலைமை வகித்தார். மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் களப்பிரன் தொடக்க உரையாற்றினார். த.மு.எ.க.ச. மாநிலப் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சயண்யா பங்கேற்று, சாதியற்ற தமிழர் என்னும் தலைப்பிலும், மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா, ஒன்னுமே புரியலே என்னும் தலைப்பிலும், கவிஞர் திருச்சி சரவணன் காவியற்ற தமிழகம் என்னும் தலைப்பிலும் பேசினர்.
இதில் இசை, பாரதிதாசன் பாடல்கள் மற்றும் புறநானூற்றுப் பாடலுக்கு நடனங்கள், கவிதை, தப்பாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம், நெருப்போடு சாகச நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றன.
பின்னர் அங்கு கூடியிருந்த மக்களிடம் ஆதவன் தீட்சண்யா, நந்தலாலா, கா.பிரகதீஸ்வரன், களப்பிரன் ஆகியோர் கேரள வெள்ள நிவாரண நிதிக்காக, துண்டு ஏந்தி வசூல் செய்தனர்.
இதில் வசூலான ரூ. 11,569 கேரள நிவாரண நிதிக்காக வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை மாவட்டத் தலைவர் ந. காவியன் தொகுத்து வழங்கினார். வரவேற்புக்குழுத் தலைவர் மா.நடராஜன் வரவேற்றார். கிளைச் செயலாளர் ப.பாலசுந்தரம் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

