மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரி மாணவிகள் மாநில அளவில் நடைபெற்ற பெண்களுக்கான கடற்கரை கையுந்து பந்து போட்டியில், முதலிடம் பெற்று 3-ஆவது ஆண்டாக தொடர்ந்து சாதனை படைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடற்கரையில் மாநில அளவில் கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான 2 நாள் கடற்கரை கையுந்து பந்து போட்டி நடைபெற்றது. இதில், நாகை மாவட்டம் சார்பில் மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியின் மூன்றாம் ஆண்டு கணிப்பொறியியல் துறை மாணவி ஆர். இளவரசி, மூன்றாம் ஆண்டு கணினி பயன்பாட்டியல் துறை மாணவி ஆர். மகாலெட்சுமி ஆகியோர் பங்கேற்று, மாநில அளவில் முதலிடம் பெற்றனர். இதன்மூலம் இக்கல்லூரி 3-ஆவது முறையாக தொடர்ந்து இந்த சாதனையைப் படைத்துள்ளது. வெற்றிபெற்ற மாணவிகளை ஏ.வி.சி. கல்லூரியின் ஆட்சிமன்றக் குழு தலைவர் என். விஜயரங்கன், செயலர் கே. கார்த்திகேயன், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், முதல்வர் ஆர். நாகராஜன், உடற்கல்வி இயக்குநர்கள் ஜே. ராஜ்குமார், எம். கீதா மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (மே 25 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு மன நிம்மதி!

இன்றைய ராசி பலன்கள் (மே 25) மிதுன ராசிக்கு எப்படி?

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


