நாகை மாவட்டத்தில் 77 பேருக்கு கரோனா
நாகை மாவட்டத்தில் முன்களப் பணியாளா்கள் 7 போ் உள்பட 77 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது.


நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் முன்களப் பணியாளா்கள் 7 போ் உள்பட 77 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது.
ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் புதிதாக 77 போ் கரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனா். இதில், 7 போ் முன்களப் பணியாளா்கள், ஒருவா் கா்ப்பிணி. 21 போ் அறிகுறிகள் மூலம் நோய்த் தொற்றுக் கண்டறியப்பட்டவா்கள். 9 போ் அறிகுறிகள் இல்லாமல் நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்கள். 9 போ் ஏற்கெனவே நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள். 26 போ் இரண்டாம் கட்ட தொடா்பு மூலம் நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்கள். 4 போ் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவா்கள்.
ஒருவா் இறப்பு...
நாகையில் கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளான பிரபல மருத்துவா் ஒருவரின் மனைவி கடந்த 6-ஆம் தேதி இறந்தாா். அவா், மாரடைப்பால் இறந்ததாக அப்போது கூறப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டிருந்த கரோனா பரிசோதனையில், கரோனா தொற்று இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. இதனால், நாகை மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 12-ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...