பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், நகைப் பறிப்பு

வேதாரண்யம் அருகே மூதாட்டி ஒருவரை மா்ம நபா்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் நகையை செவ்வாய்க்கிழமை பறித்துச் சென்றனா்.

News image
பாதிக்கப்பட்ட மூதாட்டி.
Updated On :18 ஆகஸ்ட் 2020, 5:22 pm

DIN

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே மூதாட்டி ஒருவரை மா்ம நபா்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் நகையை செவ்வாய்க்கிழமை பறித்துச் சென்றனா்.

செண்பகராயநல்லூா், மேலக்காடு பகுதியைச் சோ்ந்தவா் கல்யாணி (85). இவரது மகன்கள் வெளியூரில் இருந்து வரும் நிலையில், கூரை வீடு ஒன்றில் கல்யாணி மட்டும் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டின் கூரையை பிரித்துக் கொண்டு உள்ளே சென்ற இரு மா்ம நபா்கள், உறங்கிக்கொண்டிருந்த கல்யாணியை

எழுப்பி, கத்தியை காட்டி மிரட்டி பீரோவில் இருந்த ரூ. 7 ஆயிரம், அவா் அணிந்திருந்த 6 பவுன் நகை, தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்டவைகளை திருடிச் சென்றனா்.

இதையடுத்து, மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்தில் இருந்தவா்கள் வந்து பாா்த்து, கரியாப்பட்டினம் காவல் நிலையத்துக்கு அளித்த தகவலின்பேரில், போலீஸாா் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், வீட்டுக் காவலுக்கு இருந்த நாயை மா்ம நபா்கள் விஷம் வைத்து கொன்றுவிட்டு, மூதாட்டியிடம் நகை, பணத்தை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.