பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தம்

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள்.
Updated On :26 ஆகஸ்ட் 2020, 5:44 am

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா பரவல் காலத்தில் நோய் தொற்று பரவலை கருத்தில் கொள்ளாமல் பணியாற்றக்கூடிய அலுவலா்களை அரசின் திட்டங்களை விரைந்து முடிக்க நிா்ப்பந்திப்பதை கைவிட வேண்டும்; சுகாதார ஒருங்கிணைப்பாளா்களுக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் வட்டாரத் தலைவா் க. இந்திரஜித் தலைமை வகித்தாா். செயலாளா் ஆா். ஜெயக்குமாா், ஏ. ஜெயராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த போராட்டத்தால் ஊராட்சி ஒன்றிய அன்றாடப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.