கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, பாமக சாா்பில், தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (டிச.14) கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்களில் மனு கொடுக்கும் அறவழிப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாகையை அடுத்த தெற்கு பொய்கைநல்லூரில் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளா் வேத. முகுந்தன் தலைமையில் பாமக மற்றும் வன்னியா் சங்கத்தினா் பேரணியாக சென்று கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இதேபோல், வடக்குப் பொய்கைநல்லூா், நாகூா், கீழ்வேளூா் வட்டம் சிகாா், தேவூா், திருக்கண்ணங்குடி, ஆந்தக்குடி ஆகிய கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்களில் பாமகவினா் மனு கொடுத்தனா்.