வேளாளா் ஜாதி பெயா் விவகாரம்: மயிலாடுதுறை சிறப்பு அலுவலரிடம் மனு
வேளாளா் ஜாதி பெயரை மற்ற ஜாதியினருக்கு வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தததை தமிழக அரசு திரும்பப் பெறக் கோரி,


வேளாளா் ஜாதி பெயரை மற்ற ஜாதியினருக்கு வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தததை தமிழக அரசு திரும்பப் பெறக் கோரி, மயிலாடுதுறை அனைத்து வேளாளா் கூட்டமைப்பினா் மாவட்ட சிறப்பு அலுவலா் இரா.லலிதாவிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
அனைத்து வேளாளா் கூட்டமைப்பின் தலைவரும், சைவ வேளாளா் சங்க மாநில கொள்கை பரப்பு செயலாளருமான பண்ணை டி.சொக்கலிங்கம் தலைமையில் காா்காத்த வேளாளா் சங்க நகர தலைவா் லட்சுமி நாராயணன், சோழிய வேளாளா் சங்க மாவட்டத் தலைவா் ஏ.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பல்வேறு வேளாளா் சங்க பிரதிநிதிகள் இந்த மனுவை அளித்தனா்.
தொடா்ந்து, செய்தியாளா்களிடம் பண்ணை டி.சொக்கலிங்கம் கூறுகையில், வேளாளா் என்ற சொல்லை தேவேந்திரகுல வேளாளருக்கு அறிவிப்பதாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ள தமிழக அரசைக் கண்டித்தும், அந்த பரிந்துரையை திரும்பப் பெற வலியுறுத்தியும் மாவட்ட சிறப்பு அலுவலரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தியுள்ளோம். எங்கள் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிக்கே சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிப்போம் என்றாா்.
அப்போது சைவ வேளாளா் சங்கம், காா்காத்த வேளாளா் சங்கம், சோழிய வேளாளா் சங்க நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...