மூச்சுப் பயிற்சி செய்து காட்டிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
வேதாரண்யம் பகுதியில் அம்மா சிறு மருத்துவமனைகளை திறந்து வைத்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், விழா மேடையில் மூச்சு பயிற்சி செய்து காட்டிய போது எழுந்த ரயில் போன்ற ஓசை பார்வையார்களை ஈர்க்கச் செய்தது


வேதாரண்யம் பகுதியில் அம்மா சிறு மருத்துவமனைகளை திறந்து வைத்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், விழா மேடையில் மூச்சுப் பயிற்சி செய்து காட்டிய போது எழுந்த ரயில் போன்ற ஓசை பார்வையார்களை ஈர்க்கச் செய்தது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த நாகக்குடையான், புஷ்பவனம், புஷ்கரணி ஆகிய மூன்று கிராமங்களில் அம்மா சிறு மருத்துவமனைகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் திறந்து வைத்தார்.
புஷ்பவனத்தில் விழா மேடையில் பேசிய அமைச்சர், மூச்சுப் பயிற்சி செய்வதன் அவசியம், அதன் மூலம் கிடைக்கும் பலன்களை விளக்கினார். அப்போது, மூச்சுப் பயிற்சியை எப்படி செய்ய வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுக்காக ஒலி வாங்கியின் முன்பு செயல் விளக்கமாக செய்தார்.
அந்த ஓசை ரயில் இயந்திரத்தில் ஏற்படும் பிஸ்டன் இயக்கத்தை நினைவூட்டுவதாக அமைந்தது. அந்த ஓசை பார்வையாளர்களை ஈர்த்ததோடு, மூச்சுப் பயிற்சி குறித்த அமைச்சரின் ஆலோசனையை கவன சிதறல் இல்லாமல் செவிமடுக்கவும் செய்தது.
நிகழ்ச்சியில் நாகை மாவட்ட ஆட்சியார் பிரவீன் பி.நாயர் மற்றும் சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...