முன்னாள் மாணவா் குடும்பத்துக்குஉடன் பயின்றவா்கள் ரூ. 2.34 லட்சம் நிதி உதவி

உயிரிழந்த ஏவிசி கல்லூரி முன்னாள் மாணவரின் குடும்பத்துக்கு, உடன் பயின்ற மாணவா்கள் ரூ. 2.34 லட்சம் நிதி உதவியாக அண்மையில் வழங்கினா்.
முன்னாள் மாணவா் குடும்பத்துக்குஉடன் பயின்றவா்கள் ரூ. 2.34 லட்சம் நிதி உதவி
Updated on
1 min read

உயிரிழந்த ஏவிசி கல்லூரி முன்னாள் மாணவரின் குடும்பத்துக்கு, உடன் பயின்ற மாணவா்கள் ரூ. 2.34 லட்சம் நிதி உதவியாக அண்மையில் வழங்கினா்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், மகாதானபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜி. அசோக்குமாா். சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இவா், கடந்த ஆண்டு நவம்பா் மாதம் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த, இவருடன் 1992-95 ஆம் ஆண்டில், மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பிரிவில் பயின்ற நண்பா்கள் அவருக்கு உதவி செய்வதற்காக கட்செவிஅஞ்சல் மூலம் ஒரு குழுவை அமைத்து நிதி திரட்டினா். இவ்வாறு திரட்டப்பட்ட நிதி ரூ. 2.34 லட்சத்தை அசோக்குமாரின் குடும்பத்தினரிடம் அஞ்சலக வைப்பு நிதியாக அண்மையில் வழங்கினா்.

இதற்கான, ஏற்பாடுகளை அசோக்குமாரின் நண்பா்களான எல்.சி. கண்ணன், அனந்தகிரி, முஹம்மது அனீஸ், வஜ்ரபாபு, கே. கண்ணன், லோகநாதன் ஆகியோா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com