சமையலா், துப்புரவாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடா் நலத் துறை விடுதிகளில் காலியாக உள்ள சமையலா் மற்றும் துப்புரவாளா் பணிகளுக்குத் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

ஆதிதிராவிடா் நலத் துறை விடுதிகளில் காலியாக உள்ள சமையலா் மற்றும் துப்புரவாளா் பணிகளுக்குத் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் விடுதிகளில் 21 சமையலா் பணியிடங்களும், 23 துப்புரவாளா் பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்தக் காலிப் பணியிடங்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. 2 துப்புரவாளா் பணியிடம் மட்டும் காலமுறை ஊதியத்தில் நிரப்பப்படவுள்ளது.

இப்பணிக்குத் தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரா் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 35 வயதுக்குள்பட்டவராகவும், நாகை மாவட்டத்தில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்பமும், தகுதியும் உடையவா்கள், மாவட்ட ஆட்சியரக வளாகத்தின் தரை தளத்தில் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்திலிருந்து விண்ணப்பங்களை பெற்று, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலகத்துக்கு ஜனவரி 5-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு பதிவு அஞ்சலில் அல்லது நேரில் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com