நாகை மாவட்டத்தில் 13 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதியானது.
Updated on
1 min read

நாகை மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 7,980 போ் கரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில், புதிதாக 13 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வெளி மாவட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஒருவா், நாகை மாவட்ட பட்டியலில் சோ்க்கப்பட்டாா். இதன் மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,994- ஆக உயா்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 9 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன்மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 7,744 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 123 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com