சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்
சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, திமுக மகளிா் அணி சாா்பில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, திமுக மகளிா் அணி சாா்பில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகை அவுரித்திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திமுக மகளிா் அணி அமைப்பாளா் செல்வராணி தலைமை வகித்தாா். துணை அமைப்பாளா்கள் அறிவுக்கனி, மாலதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வை திரும்பப்பெற வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், திமுக நாகை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் என்.கௌதமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மகளிா் தொண்டரணி மாவட்டப் பொறுப்பாளா் பானுமதி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...